

வி.களத்தூர் மேற்குத் தெரு மர்ஹும் K.A. அப்துல் சத்தார் அவர்களின் மனைவி எஹசன் பீவி என்பவர் இன்று (11-12-2019)சுமார் மாலை 5 மணியளவில் வபாத்தாகிவிட்டார்
இவர் A.பஷீர் அஹம்மது மற்றும் A.ஷாஜகான் அவர்களின் தாயாரும் ஆவர். வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசல் பிலால் B.சைதுல்லா அவர்களின் மாமியாரும் ஆவர்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மண்ணித்து சிறப்பான மஃஹ்பிரத்தை வழங்குவானாக ஆமீன்....
இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9:30 மணிக்கு ஜனஜா தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்:


(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
யா அல்லாஹ் ... பிழைகளை பொறுத்தருள்வாயாக ....
இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
ஆமீன் ... ஆமீன் .. யரப்பில் ஆலமீன்...
எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அம்மையாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.