அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





வி.களத்தூர் தெற்குத் தெரு வபாத்து செய்தி!
வி.களத்தூர் தெற்குதெருவில் உள்ள பொஹர்ஷா வீடு வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசல் பிலால் B.சையதுல்லா அவர்களின் மகன் S.முபாரக்அலி என்பவர் இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் மக்காவில் (27-12-18) சுமார் 05:30 A.M மணிக்கு வபாத்தாகிவிட்டார்கள்.......

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்......

இவர் vkalathur.in இணைய தளம் & VKALATHUR FRINDS Whats App குரூப் அட்மின்களில் ஒருவரான S.பைஜூர் ரஹ்மான் மற்றும் S.முஹம்மது ரபீக் S.முஹம்மது ஹாலித் ஆகியோர்களின் தம்பி என்பது குறிபிடதக்கது....

யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை உன் பொருத்ததுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையை வழங்குவாயக ஆமீன்..









சவுதியில் இறந்த முபாரக் அலி அவர்களின் ஜனாஷ 30.12.2018 லுகர்க்கு மக்கா பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


முபாரக் அலி மறுமை வாழ்விற்காக தூவா செய்யுங்கள்










அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).


யா அல்லாஹ் ... பிழைகளை பொறுத்தருள்வாயாக ....


இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!


அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!


கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

ஆமீன் ... ஆமீன் .. யரப்பில் ஆலமீன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-