அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


துபாய்: ஐக்கிய அமீரகத்தின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியான ஷேக் முகமது தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா விதிமுறைகள் மற்றும் வங்கி உத்தரவாதத்திற்குப் பதிலாக இன்சூரன்ஸ் போன்ற புதிய திருத்தங்களை அறிமுகம் செய்துள்ளார். எனவே ஷேக் முகமது அறிவித்துள்ள புதிய விசா விதிகள் குறித்த திருத்தங்கள் குறித்து இங்கு விளக்கமாக  பார்க்கலாம்.


குறைந்த விலை இன்சூரன்ஸ் !

ஐக்கிய அமீரக நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தற்போது வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் போது ஊழியரின் பெயரில் வங்கி உத்தரவாதமாக 3000 திரஹம் செலுத்த வேண்டும் என்ற விதியினைத் திருத்தி 60 திரஹம் செலுத்தி இன்சூரன்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். ஷேக் முகமதின் இந்த அறிவிப்பினால் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கும் எடுக்கும் நிறுவனங்களுக்குப் பல மடங்கு வரை செலவு குறையும். அதிக ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்து பணிக்கு எடுக்க வாய்ப்புகளும் உள்ளது.  

விசா 
ஐக்கிய அமீரகத்திற்குப் பார்வையாளர்களாக வருபவர்கள், வசிப்பவர்கள், குடும்பங்கள் மற்றும் விசா வரம்பை மீறி சட்டத்திற்கு விரோதமாக வசிப்பவர்கள் குறித்தும் பல முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. 
டிரான்சிஸ்ட் விசா நுழைவு கட்டணம் !

ஐக்கிய அமீரக நாடுகளுக்கு இனி 48 மணி நேரத்தில் சென்று திரும்பிவிடுபவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் இருந்து விளக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 50 திராஹம் கட்டணம் செலுத்தினால் கூடுதலாக 96 மணி நேரம் வரை நேரத்தினைச் செலவிட அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

அனுமதி இல்லாமல் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் !
துபாய்க்குப் பணி நிமித்தமாக அல்லது வேறு காரணங்களுக்காக வந்து விசா காலம் முடிந்தும் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்கும் 'no entry' ஸ்டாம்ப் முறையில் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.  

என்ன செய்ய வேண்டும்? 

விசா காலம் முடிந்தும் தங்களது நாட்டிற்குத் திரும்பி செல்லாமல் சட்ட விரோதமாகத் துபாயில் இருப்பவர்களுக்கு வாழ் நாள் தடை என்பதை நீக்கி இரண்டு வருடங்கள் தடை என்ற ஸ்டாம்ப் மூலம் வெளியேறலாம் என்றும் இதற்கு விண்ணப்பிக்கத் திரும்பி செல்வதற்கான டிக்கெட்டினையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

விசா புதுப்பித்தல் !

ஐக்கிய அமீரகத்திற்கு வந்துள்ள தனிநபர்கள் விசா காலம் முடிந்தும் திரும்பி செல்ல விரும்பாமல் அல்லது உடனே மீண்டும் திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மீண்டும் விசாவினை புதுப்பித்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய 6 மாத விசா !

ஐக்கிய அமீரகத்தில் இன்னும் கூடுதலாகப் பணிபுரிய விரும்புபவர்கள் கூடுதலாக 6 மாத விசாவிற்கான அனுமதியைப் பெற்று வேலை தேடலாம். திறமைகள் மற்றும் தொழில் திறன் படைத்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பு 
ஐக்கிய அமீரக மற்றும் வெளிநாட்டு மக்கள் என அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்புச் சந்தையினை அளிக்க அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-