அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.28
எதிர்வரும் 2018 ஆங்கில வருடப்பிறப்பு எனும் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று அபுதாபியில் பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்த சிறப்புச் சலுகை 2017 டிசம்பர் 31 ஆம் தேதி பின்னிரவு 12.01 மணிக்குத் துவங்கி 2018 ஜனவரி 2 ஆம் தேதி காலை 7.59 மணிவரை நீடிக்கும்.

இரவு 9 மணிமுதல் காலை 8 மணிவரை ரெஸிடென்ஷியல் பார்க்கிங் ஏரியாவுக்கு என தற்போது நடைமுறையிலுள்ள பார்க்கிங் சட்டங்களே செல்லும், போக்குவரத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என்ற சட்டம் உட்பட.

அபுதாபி அல் அய்ன் மார்க்கத்தில் இயக்கப்படும் பஸ்களை தவிர்த்து மற்ற பஸ்கள் வழமைபோல் இயங்கும். அபுதாபி அல் அய்ன் மார்க்கத்தில் மட்டும் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி பகல் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.

அதேபோல் 2018 ஜனவரி 1 ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-