அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு போக்குவரத்து முனையம் துவங்கப்பட்டது மதுரை விமான் நிலையத்தில் இருந்து தற்போது இலங்கைக்கு இரு விமானங்களும் ,துபை மற்றும் சிங்கப்பூர் என நாள் ஒன்றுக்கு நான்கு விமானங்கள் சேவையில் உள்ளது. 

இங்கு சர்வதேச சரக்கு போக்குவரத்து முனையம் துவங்கியதின் மூலம் இனி மதுரையில் இருந்து மல்லிகை பூ காய்கறி பழங்கள் முட்டை இயந்திரங்களின் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்யலாம். 

இந்நிலையில் மதுரை மல்லி உட்பட 300 kg பூக்களின் ஏற்றுமதியோடு சர்வதேச சரக்கு சேவை இன்று துவங்கியது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன்னுடைய மதுரை – துபாய் விமானத்தில் முதல் ஏற்றுமதி சரக்கை ஏற்றிச் சென்றது. மதுரை, திண்­டுக்­கல், சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், தேனி, விரு­து­ந­கர், திரு­நெல்­வேலி, கன்­னி­யா­கு­மரி ஆகிய தென் மாவட்­டங்­களில் இருந்து, காய்­க­றி­கள், மலர்­கள், பழங்­கள், ஆடை­கள், கைத்­தறி பொருட்­கள் உள்­ளிட்­டவை, மாதம், 150 – 200 டன் என்ற அள­வில் மற்ற விமான நிலை­யங்­கள் மூலம், ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்றன. இனி, மது­ரை­யில் இருந்து ஏற்றுமதி மேலும் அதி­க­ரிக்­கும்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-