அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.12
துபையில் சாலிக் மற்றும் பொது போக்குவரத்திற்கு வாட் வரி கிடையாது

அமீரகம் மற்றும் இதர வளைகுடா அரபு நாடுகளிலும் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட் வரி அமுலுக்கு வருகிறது. இந்த வரியின் அளவும், வரி வசூலிக்கப்படும் பொருட்களும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.

அமீரகத்தில் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மீதும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது, மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உட்பட.

இந்நிலையில், துபையில் 7 சாலிக் டோல்கள் (டோல்கேட்டுகள்) செயல்படுகின்றன. ஒவ்வொரு டோலிலும் இங்கு தடவைக்கு ஒருமுறை 4 திர்ஹம் கட்டணம் எடுக்கப்படுகிறது. இவற்றிற்கும் சாலிக் டோல் கட்டணம் வசூலிக்கப்படுமா? என்ற அச்சம் நிலவியது.

துபையில் சாலிக் டோல் கட்டணங்களின் மீதும் பொது போக்குவரத்துக்களான பஸ், மெட்ரோ, டிராம், படகுகள் மற்றும் டேக்ஸி கட்டணங்கள் மீதும் டோல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என துபை போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

Source: Khaleej Times / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-