அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.24
சோதனை முயற்சியாக துபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் டேக்ஸிக்கள் அறிமுகம்.

பெட்ரோலியத்திற்கு மாற்று சக்திகளை கண்டறிவதிலும், அறிமுகப்படுத்துவதிலும் துபை எப்போதுமே முன்னனியில் இலங்குகிறது. தற்போது மின்சக்தியில் இயங்கும் கார்கள் அறிமுகமாகின்ற நிலையில் முழுமையாக ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனங்களாக டயோட்டா மிராய் ரக (Toyota Mirai) கார்களை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

துபை சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும் லிமோசின் ரக டேக்ஸிக்களான இவைகள் வெற்றிபெற்றால் துபை போக்குவரத்து துறையில் கணிசமாக இணைக்கப்படும். இந்த கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் புகைகளை உமிழாது மாறாக தண்ணீரை மட்டுமே வெளியேற்றும்.

எஞ்சினிலிருந்து சத்தம் வராது, ஒரு சில நிமிடங்களிலேயே ஹைட்ரஜன் டேங்கை நிரப்பிக் கொள்ளலாம். ஒருமுறை நிரப்பப்படும் ஹைட்ரஜனை கொண்டு 500 கி.மீ வரை வாகனத்தை இயக்கலாம் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.

முதன்முறையாக அல் புத்தைம் வாகன விற்பனையகம் சார்பாக இத்தகைய கார்களுக்கு ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை துபை பெஸ்டிவல் சிட்டி அருகே துவக்கியுள்ளனர்.

Source: Gulf News


நன்றி-அதிரை நியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-