அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ரியாத்(14 டிச 2017): சவூதியில் அதிக வாகன விபத்துகள் வாகனம் ஓட்டுபவர் மொபைல் போன் உபயோகிப்பதாலேயே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதியில் 2017 ஜனவரி முதல் நடந்த வாகன விபத்துகளில் இதுவரை 7489 பேர் மரணித்துள்ளனர். 2017ல் இதுவரை பதிவு செய்யப்பட்ட 4 லட்சத்து 60 ஆயிரத்து 488 வாகன விபத்துகளில் 33 ஆயிரது 199 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு நிமிடங்களில் ஒரு விபத்து. ஒரு மணி நேரத்தில் 4 பேருக்கு காயங்கள். குறைந்தது ஒரு நாளில் வாகன விபத்துகளில் 20 பேர் சராசரியாக மரணிக்கின்றனர். என்று புள்ளி விவபரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்களில் மரணமடைவோர் பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 73 சதவீத விபத்துகள் முக்கிய நகரங்களில் நடப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்களை தவிற்க சவூதி போக்குவரத்து காவல்துறை பல்வேறு புதிய திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் அதிக அளவில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால், அதிவேகத்தில் பயணித்தால் ரகசிய கேமராக்களில் பதிவாகும். இதற்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் சிறைத்தண்டனை வரை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-