அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் இந்திய கல்விக் கண்காட்சி நேற்று சனிக்கிழமை தொடங்கியது. இந்த கல்விக் கண்காட்சி துபாய் சலாஹுதீன் சாலையில் உள்ள கிரௌன் பிளாசா ஓட்டலில் நடக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இந்த கண்காட்சியை நடத்துகிறது.

இந்த கண்காட்சியை வழக்கறிஞர் அலி அல் சாம்சி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது இந்தியா திறமையானவர்கள் கொண்ட ஒரு நாடாக திகழ்கிறது. துபாய் நகரம் அதிகமான திறமையாளர்களை வரவேற்க காத்திருக்கிறது என்றார்.

இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன் மதுரை நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஜே. விக்னேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் அக்னி ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குணா கூறியதாவது : குழந்தைகளின் உயர்கல்வி குறித்த ஆர்வம் பெற்றோர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருவதையடுத்து இந்த இரண்டு நாட்கள் கல்விக் கண்காட்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறைவடையும் இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்து வருகிறது. மாணவ, மாணவிகளின் திறமையை சோதனை செய்யக்கூடிய சிறப்பு பயிற்சிகள் இந்த கண்காட்சியில் இருந்து வருகிறது.

இதில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-