அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

டிச.12

கண்கவர் விண்கல் மழை (Spectacular Geminid meteor shower) வரும் வியாழன் இரவு பொழியும் என்றும் இவற்றை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் துபை வானியல் குழுமம் தெரிவித்துள்ளதுடன் விண்வெளி ஆர்வலர்கள் இந்த நட்சத்திர மழையை பார்த்து ரசிப்பதற்கான சிறப்பு முகாம் ஒன்றையும் துபை அல் குத்ரா ஏரி அருகே நடத்தவுள்ளது. இதற்கான டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுகளும்  Q-Tickets.com இங்கு உண்டு அல்லது அல் துரையா அஸ்ட்ரானமி சென்டரை (Al Thuraya Astronomy Center) அனுகவும்.

இந்த விண்கல் மழை பொதுவாக டிசம்பர் 4 முதல் 16 வரை நிகழ்ந்தாலும் அதன் உச்சபட்ச எரிகல் மழை டிசம்பர் 14 ஆம் தேதி அன்று காணக் கிடைக்கும் என்றும் மணிக்கு சுமார் 120 எரிகற்கள் என வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தும் என்றும் இந்த வானவேடிக்கையை பார்ப்பதற்கு உகந்த நேரம் எதிர்வரும் வியாழன் பின்னேரம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை என்றும் துபை வானியல் குழு தெரிவித்துள்ளது.

வெறும் கண்களால் ரசிப்பதற்கான டிப்ஸ்:

1. பொறுமையுடன் காத்திருப்பவர்கள் மட்டுமே இதை ரசிப்பதற்கு ஏற்றவர்கள், எந்த நேரத்திலும் பொழியும் எரிகல் மழையை பார்ப்பதற்காக நீண்ட நேரம் வானத்தை உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
2. முதலில் ஊரை விட்டு விலகிய, மின் வெளிச்சங்கள் இல்லாத திறந்தவெளி பகுதிக்கு செல்லவும்.
3. ஒரு போர்வை அல்லது ஒரு நாற்காலியை அமர்ந்து ரசிப்பதற்காக எடுத்துச் செல்லலாம், வெறும் தரையில் அமர்ந்து பார்ப்பதற்கும் தடையில்லை.
4. செல்லுமுன் உங்கள் பகுதியில் சந்திரனின் உதயம் மற்றும் மறைவு நேரத்தை குறித்துக் கொள்ளவும், காலநிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.
5. தொலைநோக்கிகள் தேவையில்லை, வெறும் கண்களால் தரிசிக்கலாம்.

Source: Gulf News


நன்றி-அதிரைநியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-