அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.14
அமீரகம் முழுவதும் குழந்தைகளுக்கான பிரான்ஸ் தயாரிப்பு பால்மாவுகள் விற்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற பால்மாவு தயாரிப்பு நிறுவனம் லக்டாலீஸ் (Lactalis infant milk products). இதன் குழந்தைகளுக்கான பால்மாவு தயாரிப்புக்கள் அமீரகம் உட்பட சுமார் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரான்ஸ் நாட்டின் சுகாதார பொது இயக்குனரகம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து அந்த பால் பொருட்களில் குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியாக்கள் அதில் கலந்துள்ளது (salmonella bacteria contamination) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத வயதுடைய சிசுக்கள் 20 பேர் இந்த பால்மாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் மட்டும் டிசம்பர் 1 முதல் இன்று வரை சுமார் 26 சிசுக்கள் பாதிப்படைந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார ஆணையம் எச்சரித்துள்ளதை அடுத்து உலகம் முழுவதிலிருந்தும் தனது தயாரிப்புக்களை திரும்பப் பெற்று வருவதாக லக்டாலீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாடு, அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் அபுதாபி உணவுக்கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மாநகராட்சி ஆகியவை இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அமீரகத்தின் அனைத்து விற்பனையகங்களிலிருந்தும் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-