அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

டிச.12

அமீரகத்தில் சுமார் 5 மாதங்கள் வெளியே தலைகாட்ட முடியாதளவுக்கு மிகவும் உஷ்ணமாக திகழும். இக்காலத்தில் பொதுமக்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதையே விட்டுவிடுவார்கள், இதனால் அவர்களின் உடல் பருமனாவதுடன் பல்வேறு நோய்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த உஷ்ணமான காலத்திலும் மக்கள் தொடர்ந்து நடைபயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குளிரூட்டப்பட்ட சிறப்பு நடைபாதைகளை உருவாக்கி வருவதாகவும் இவை விரைவில் திறக்கப்படும் எனவும் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸிமி ஷார்ஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள சட்டத்தால் கடந்த 32 ஆண்டுகளில் முதன்முறையாக ஷார்ஜாவில் புகைப்பிடித்தலால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், ஷார்ஜாவில் மது அருந்துதல் சட்டவிரோதமாக திகழ்வதால் புற்றுநோய் பாதிப்பு சுமார் 10 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிபுணர்கள் பலரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையின் 3ல் ஒரு பகுதியினர் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படுவார்கள், சுமார் 500 மில்லியன் பேர் நீரிழிவு நோய்க்கும், சுமார் 320 மில்லியன் பேர் தொற்று அல்லாத நோய்களால் இறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 120 மில்லியன் பேரை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn


நன்றி-அதிரைநியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-