அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.09
அமீரகம், அஜ்மானில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறலில் 2017 ஜனவரி முதல் டிசம்பர் 2 வரை ஈடுபட்டதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களை 50 சதவிகித தள்ளுபடியில் செலுத்தலாம் என்ற சலுகையை அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக ராணுவப் படைகளின் துணை கமான்டருமாக ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்திருந்தார்.

இந்த சிறப்பு சலுகை அமீரக தேசிய தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜ்மான் ஆட்சியாளர் எதிர்வரும் 2018 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளார். இந்த சலுகை அபராதத்தை உள்துறை அமைச்சகத்தின் அஜ்மான் போலீஸின் ஸ்மார்ட் ஆப்பை உபயோகித்து மட்டுமே கட்ட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Source: Emirates 247


நன்றி-அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-