அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
துபையில் மோட்டார் சைக்கிள் மீதும் பார்க்கிங் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

துபையில் ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5% பல்முனை வாட் வரியும் கிட்டதட்ட அனைத்துப் பொருட்கள், சேவைகளின் மீதும் வருகிறது.

துபையில் பைக் ஓட்டுதல் என்பது படிப்பறிவற்ற அல்லது ஒரளவே படித்த பலருக்கும் மெஸஞ்சர் எனும் வேலைவாய்ப்பை தந்து கொண்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் நம் நாட்டைப் போல் சொகுசு வாகனங்களாக அல்லது வேலைக்குச் செல்லும் நோக்குடன் பயன்படுத்தப்படுவதில்லை மாறாக பைக் ஓட்டுவது என்பதே வேலை தான் அதிலும் பெரும்பாலோருக்கு குறைந்த சம்பளமே கிடைத்து வருகிறது.

பொதுமக்களுக்கும் வாகனங்களும் இடைஞ்சல் இல்லாத வகையில் துபையில் மோட்டார் பைக்குகளை எந்த இடத்திலும் பார்க்கிங் செய்யலாம் என்ற நிலை சில மாதங்களுக்கு முன்வரை இருந்தது. அந்த சிறப்பு வசதியும் ரத்து செய்யப்பட்டதால் இருப்பிடத்திலிருந்து தொலை தூரத்தில் பைக்குகளை நிறுத்திவிட்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.

தற்போது பைக்குகளுக்கும் பிற வாகனங்களுக்கு உள்ளது போல் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும், அதற்கான பிரத்தியேக பார்க்கிங் பகுதிகளில் அல்லது அங்கு இடமில்லாத போது பிற வாகனங்களுக்கான நிறுத்தங்களில் நிறுத்திக் கொள்ளலாம் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பைக் பார்க்கிங் கட்டணங்களின் மீது எத்தகைய சலுகையோ தள்ளுபடியோ இல்லை என்றும் அந்தந்த பார்க்கிங் பகுதிகளுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களையே இதற்கும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் டிக்கெட்டுகளை பைக் மீது வைக்க முடியாது அல்லது காற்றில் பறந்துவிடும் அல்லது வேறு யாராவது எடுத்துச் சென்றுவிடக்கூடும் என அச்சப்படுவோர் ஸ்மார்ட் பார்க்கிங் ஆப் (smart parking app) வழியாக அல்லது குறுஞ்செய்தி (SMS) அனுப்பியும் பார்க்கிங் கட்டணங்களை செலுத்தலாம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பைக் ஓட்டும் வேலையில் உள்ளவர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

கார் வைத்திருப்போரே பார்க்கிங் கிடைக்காமல் திணறும் போது எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் அவர்களுடன் பார்க்கிங்களுக்காக மல்லுக்கட்ட வேண்டி வரும்,

நாங்கள் பைக் ஓட்டுவதே டிராபிக் நெரிசலில் இருந்து தப்புவதற்கும் பார்க்கிங் கட்டணங்களிலிருந்து விலக்கு பெறுவதற்கும் தான் இனி டிராபிக் பிரச்சனை கூடும்,

என்னுடைய டெலிவரி வேலையில் ஒவ்வொரு முறையும் பைக் பார்க்கிங்களை தேடிக் கொண்டிருக்க முடியாது அது சாத்தியமும் அல்ல,

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 திர்ஹம் என்னால் செலுத்துவது என்பது இயலாத காரியம்,

இந்து பைக்குகளை விற்றுவிட்டு காருக்கு மாறத்தூண்டும் என்பதால் ஏற்கனவே திணறும் துபை சாலைகள் தான் பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

துபை போக்குவரத்துத் துறை மறுபரிசீலணை செய்ய வேண்டும் அல்லது மாற்றுத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் பைக் ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-