அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.04
அமீரகம் தனது 46 வது தேசிய தினத்தை கொண்டாடிவரும் நிலையில் அமீரகம் ஒன்றிணைந்து ஒரே நாடாக மாறுமுன் 'ஒப்பந்த நாடுகள்' (Trucial States) என அறியப்பட்டதுடன் இவற்றிற்கான தூதரக வேலைகள், அஞ்சலகம் போன்ற பணிகளை பிரிட்டீஷ் அரசே செய்து வந்தது மேலும் இந்திய ரூபாய்களே இந்த நாடுகளின் கரன்சிகளாகவும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன.

1948 ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத்தில் இருந்து படகில் வந்த லஷ்மிசந்த் மோகன்லால் சஹோலியா என்பவர் நகைக்கடை ஒன்றை பர்துபை கிரீக் ஓரம் முதன்முதலாக திறந்தார். இந்தப் பகுதி அப்ரா மார்க்கெட் என அழைக்கப்பட்டது என்றாலும் அந்தப் பகுதியில் இருந்த கடைகள் கூரை வேயப்பட்டிருந்ததால் 'ச்சப்ரா மார்க்கெட்' (Chapra Market) என்ற பட்டப் பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. அதுவே தற்போது 'சூக் அல் கபீர்' என அழைக்கப்படுகிறது. இவரது கடையின் லைசென்ஸ் எண்;: 1, அஞ்சல் பெட்டி எண்: 197 என்பதே அதன் பழமையை சொல்லும்.

பர்துபை அப்ரா மார்க்கெட்டில் வேஷ்டியுடன் காணப்பட்ட லஷ்மிசந்த்தை 'காந்தி' என்றும் வேறு சிலர் 'லக்கு' எனவும் அழைத்துள்ளனர். இவர் 1952ல் பிறந்த 2வது மகன் சுரேஷ் லஷ்மிசந்த் சஹோலியா என்பவரை அவரது 9வது வயதில் (1961) துபைக்கு அழைத்து வந்துள்ளார். பம்பாயிலிருந்து 1 வாரம் கப்பலில் பயணம் செய்து துபையை அடைந்துள்ளனர். அப்போது சுரேஷிற்கு தனி பாஸ்போர்ட் கிடையாது, பெற்றோர்களின் பாஸ்போர்ட்டில் தான் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்திய மற்றும் அமீரக தொழிலதிபர்களுடன் நெருக்கமாக பழகும் இவர்களது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் துபை மன்னர் குடும்பத்தினரே. மன்னர் குடும்பம் பர்துபையை அடுத்துள்ள அல் பஹீதி ஏரியாவில் (Al Fahidi) ஒரு பகுதியினர் வசித்து வந்துள்ளனர். மன்னர் குடும்பத்துப் பெண்கள் இவரது நகைக்கடையில் நகைகளை தேர்வு செய்வார்கள். அந்த நகைகளை இறுதி செய்வதற்காக அல் ஜபீல் அரண்மனையில் கொண்டு சேர்த்து அவர்கள் தேர்வு செய்தது போக எஞ்சியவற்றை மீண்டும் கடைக்கு எடுத்து வருவார்களாம்.

லஷ்மிசந்த் குடும்பத்தினர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் மன்னர் குடும்பத்தினருக்கு அவ்வப்போது அன்பளிப்பாக வழங்குவார்களாம். மன்னர் குடும்பமும் இவர்களுக்கு ஊறுகாய் தயாரிக்கப் பயன்படும் வாசனையுள்ள 'மஞ்சாக்' (Manjack) என்ற பழங்களை பிரதி அன்பளிப்பாக வழங்குவார்களாம்.

கேரளத்தை சேர்ந்த தம்பதியர் கே.எஸ்.வர்கி மற்றும் மரியம்மா வர்கி ஆகியோர் பஸ்தாக்கியா (Bastakiya) பகுதியில் துவங்கிய பள்ளியில் துவக்ககால மாணவர்களில் ஒருவராக சுரேஷ் பயின்றுள்ளார். அந்த பள்ளிக்கூடமே இன்று வளர்ந்து பிரம்மாண்ட 'அவர் ஓன் இங்கிலீஷ் ஹைஸ்கூல்' என தழைத்துள்ளது.

துபை கோல்டு சூக் மற்றும் ஷார்ஜா கோல்டு சூக் கட்டுமானங்களின் போது இவர்களின் குடும்பத்திற்கு இருக்கும் பாரம்பரிய நகை அறிவின் காரணமாக அந்தந்த அரசுகள் கலந்தாலோசித்து உள்ளன. மேலும் ஷார்ஜாவிலிருந்த நகைக்கடைக்கு இவர் தனது மோட்டார் சைக்கிளில் தான் நகைகளை கொண்டு செல்வாராம். அந்த மோட்டார் சைக்கிளின் லைசென்ஸ் மற்றும் 'ஒப்பந்த நாடுகள்' (Trucial States) என விசா அடிக்கப்பட்ட தனது 2வது பாஸ்போர்ட்டையும் தனது நினைவுச் சொத்துக்களாக பாதுகாத்து வருகிறார். இவரது தந்தை 1971 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக மெர்ஸிடஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அப்ரா அப்போது வெறும் 7 கி.மீ தூரமே இருந்துள்ளது, இரு கரையையும் கடக்க 2 துடுப்பு படகுகள் மட்டுமே இருந்துள்ளன. அப்ரா ஆழப்படுத்தப்பட்ட பின் தான் இன்றைய மோட்டார் படகுகள் வந்துள்ளன.

சுரேஷ் சஹோலியாவின் குடும்ப அங்கத்தினர்கள் இன்று சுமார் 75 பேராக உயர்ந்துள்ளனர் என்றாலும் சுரேஷ் இந்தியாவை தவிர வேறு எங்கும் சென்றதில்லையாம். அது கூட 5, 6 வருடங்களுக்கு ஒருமுறை தான். இவருடைய அண்ணன் தம்பிகள் என 6 பேரும் சுழற்சி அடிப்படையில் ஊருக்கு செல்ல வேண்டியதால் இப்படித் தாமாதமானதாம்.

அமீரக வளர்ச்சியின் 46வது வருடத்தை கண்டு பிரமிக்கும் சுரேஷ்ஷிடம் துபை, ஷார்ஜா, புஜைரா என வளர்ந்துள்ளன இவரது நகைக்கடைகள். தற்போது புஜைராவில் நிரந்தரமாக வசிக்கும் சுரேஷ் வயது முதிர்வின் காரணமாக எப்போதாவது தான் ஷார்ஜா, துபை கடைகளுக்கு வருகை தருவாராம்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-