அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.16
சவுதியில் பிற வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடையாது என்ற நிலையில் பாரிய மாற்றமாக கிரீன் கார்டு வழங்கும் திட்டம் பரிசீலணையில் உள்ளதாக 'சவுதி பொருளாதார விவகாரங்களில் உள்ளூர் மற்றும் தனியார் துறைக்கான மேம்பாட்டுப் பிரிவின் தலைவரும், அமைச்சர்களின் பொது செயலகத்தின் ஆலோசகருமான பஹத் அல் ஸ்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த கிரீன் கார்டு வழங்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தகுதியாக விஞ்ஞான திறமைகள், சவுதியில் பெருமளவில் கிடைத்திராத சிறப்பு அசாத்திய தொழில் திறன்கள் மற்றும் சவுதியில் பெருமளவில் முதலீடு செய்யும் தகுதி பெற்ற தொழிலதிபர்கள் ஆகியோருக்கு கிரீன் கார்டுகள் வழங்கிட பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் தொழில் தொடங்க லைசென்ஸ் பெறுவோர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட மாட்டார்கள். (He said in order to meet the eligibility criteria, applicants must possess scientific skills or professional qualities that are not abundantly available in the Kingdom, or they should be company owners who can invest in the country.)

அதேவேளை சவுதியில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் வெளிநாட்டினர் சிலர் இத்திட்டம் சவுதி அரசு எதிர்பார்க்கும் பலனைத் தராது.ஏனெனில் தொழில்துறைக்கு தேவையான தொழிலாளர்கள் அனுமதியை குறைத்துவிட்டும், லெவி எனும் தீர்வை வரிகளை கண்டவாறு உயர்த்தி விட்டும் கிரீன் கார்டுகளை தருவது தொழில் முதலீட்டாளர்களுக்கு என்ன பயனைத் தரும் என கேள்வியெழுப்பி உள்ளனர்.

மேலும், விலைவாசி உயர்வு மற்றும் மானியங்கள் ரத்து என அறிவித்து மக்களின் வாழ்வாதரங்களை பாதிக்கச் செய்துவிட்டு கிரீன் கார்டு வழங்க பரிசீலிப்பதால் யாதொரு பயனுமில்லை மாறாக முதலில் மேற்காணும் குறைகளை பரிசீலிக்கட்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Saudi Gazette

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-