அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.18
அமீரகத்தில் குளிர் காலம் துவங்கியதை தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகின்றன. இவற்றில் ஐஸ் கட்டி மழையும் ஆங்காங்கே பெய்து வருகின்றது, குறிப்பாக நேற்று அல் அவீர் மற்றும் மலீஹா பகுதிகளில்.

மேலும் சூழ்ந்துள்ள கருமேகங்கள் அஜ்மான், உம்மல் குவைன், புஜைரா போன்ற பகுதிகளில் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளன.

இன்னொரு புறம் துபை போன்ற எமிரேட்டுக்கள் பல்வேறு பண்டிகை காலங்களின் போது வானவேடிக்கைகளுக்காக பல மில்லியன் திர்ஹம்களை இரைத்து வருகின்றன. இதுபோன்ற ஆடம்பரங்கள் இல்லாத ராஸ் அல் கைமா போன்ற எமிரேட்டுக்களை இறைவனின் இயற்கை அற்புதமான மின்னல்கள் செலவின்றி அழகூட்டி மக்களை அகம்மகிழச் செய்கின்றன.

நேற்றிரவு ராஸ் அல் கைமாவில் மழை மின்னல் வெட்டியபோது 'கத்தரிப்பூ ஊதா' (Purple) நிறத்தை உமிழ்ந்து பார்த்தோரை பரவசப்படுத்தியது. கீழ்க்காணும் லிங்க் உள்ளே சென்று இருட்டில் கார் ஒன்று கடந்து செல்லும் 5 நொடி நேர வீடியோ கிளிப்பை பார்த்து ரசிக்கவும்.http://gulfnews.com/news/uae/weather/purple-storm-strikes-ras-al-khaimah-1.2142110

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-