அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
அமீரகத்தின் மிக இளம் வயது விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பாராட்டு.

அமீரகத்தின் மிக இளம் வயது விஞ்ஞானியாக 12க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள மாணவி பாத்திமா அல் காபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது சமீபத்திய கண்டுபிடிப்பான ரோபோ ஒன்று தான் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களிடம் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.

சோதனை அடிப்படையில் உருவாகியுள்ள இந்த ரோபோ, மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல இயலாத நாட்களில் மாணவருக்கு பதிலாக பள்ளிக்குச் சென்று, வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனிக்கும், ஆசிரியர்களுடன் பாடம் குறித்த சந்தேகங்களை கேட்கும், இவை அனைத்தையும் பள்ளிக்கு வர இயலாத அந்த மாணவர் பின்பு தெரிந்து கொள்ளமாறு உருவாக்கி இருந்தார்.(கட் அடிக்கிற பசங்களுக்கு அப்ப ஜாலி தான்)

(இதன் வளர்ச்சி வகுப்பறையுடன் நின்றுவிடாமல் பல்வேறு ஆக்கபூர்வ பணிகளுக்கும் பயன்படலாம். உதாரணத்திற்கு நமக்கு பதிலாக செமினார்கள், ஓர்க் ஷாப்கள், கம்பெனி மீட்டிங்குகள், நம்ம நாட்டு மந்திரிகளின் மந்திரி சபை கூட்டங்கள் போன்ற இன்னும் பல)

இந்த கண்டுபிடிப்பை பற்றி அறிந்த அபுதாபி பட்டத்து இளவரசர் தனது 'கஸ்ர் அல் பஹர்' அரண்மனைக்கு மாணவியை வரவழைத்து பாராட்டினார். இந்த நிகழ்வை தொடர்ந்து தனது பொறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக அம்மாணவி தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-