அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி(14 டிச 2017): வங்கி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை மார்ச் 31 2018 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் அனைத்து தேவைகளை பெறுவதற்கும் ஆதார் அடையாள எண்ணை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதுதொடர்பான வழக்குகளை அரசியலமைப்பு பிரிவு விசாரிக்கிறது.

இந்நிலையில் வங்கி கணக்குகள் மற்றும் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு வங்கி கணக்குகள் மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31-ம் தேதியை கடைசி தேதியாக அறிவித்து இருந்தது.

இப்போது வங்கி கணக்குகள் மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த டிசம்பர் 31-ம் தேதி காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

The government on Wednesday extended the deadline for linking bank account with Aadhaar. "It has been decided by the Government to notify 31st March, 2018 or six months from the date of commencement of bank account based relationship by the client, whichever is later, as the date of submission of Aadhaar number & PAN or Form 60 by the clients to the reporting entity," a tweet by the Ministry of Finance said.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-