அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி (04 டிச 2017): வாட்ஸ் அப் குழுமங்களில் இனி எந்த பதிவு பதிந்தாலும் குழு அட்மின் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத்தில் மிக வேகமாக பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது வாட்ஸ் அப் மெசெஞ்சர். இதில் இலகுவாக தகவல்களை பறிமாறிக்கொள்ளலாம். குறுந்தகவல்களுக்கு அடுத்த கட்டமாக இருந்த வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பல தகவல்கள் போலியானது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இந்நிலையில் குழுமங்களில் குழு உறுப்பினர்கள் பதியும் பல தகவல்கள் பலரையும் அதிருப்தி கொள்ள செய்துள்ளது. சிலர் இதனால் மன சஞ்சலங்களுக்கும் ஆளாகியுள்ளனர். இதில் முக்கியமாக குழும அட்மின் மிகவும் பாதிக்கப்படுகிறார்.

இதனால் வாட்ஸ் அப் குழுமங்களுக்கு புதிய செட் அப் கொண்டு வருகிறது. அதன்படி குழும அட்மின் எதனை வேண்டுமானாலும் பகிரலாம். ஆனால் குழுமத்தில் உள்ளவர்கள் எதையும் நேரடியாக பதியவோ ஷேர் செய்யவோ முடியாது. 

அந்த பதிவுகள் குழும அட்மினுக்கு செல்லும் அவர் ஒப்புதல் பட்டனை சொடுக்கினால் மட்டுமே குழுமத்தில் பிற உறுப்பினர்களின் தகவல்களை பார்க்க முடியும். இதனால் விரும்பத்தகாத பல பதிவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும்.

வாட்ஸ் அப்பில் வரவுள்ள இந்த செயல்முறை பலருக்கு உபயோகமாக குறிப்பாக குழும அட்மின்களுக்கு சில அசவுகரியங்களை தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp is likely to give group administrators more powers where they will be able to restrict all other members.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-