அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.12
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (non-resident Indians - NRIs) ஆதார் கார்டு எண்ணை பான் கார்டுடன் (Permanent Account Number - PAN) இணைக்கத் தேவையில்லை என அமீரகத்திற்கான இந்திய தூதரகம் இன்று அபுதாபியில் தெரிவித்தது. அதேபோல் வருமான தாக்கலுக்கும் (Income tax return) ஆதார் எண் அவசியம் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஓவர்சீஸ் இந்தியர்களுக்கான அடையாள அட்டை (Overseas Citizen of India (OCI) Cardholders) வைத்திருப்பவர்கள் 1 வருடத்திற்கு குறைந்தபட்சம் 182 நாட்கள் தொடர்ந்து தங்கியிருந்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கோ அல்லது சிம் கார்டு பெறுவதற்கோ ஆதார் அட்டை தர வேண்டிய அவசியமில்லை.

அதேபோல் வங்கிப் பரிவர்த்தனைகள், 50,000 ரூபாய்க்கு மேல் டெபாஸிட் செய்தல், பங்குச் சந்தை வியாபாரம் போன்றவற்றிற்கு பான் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-