அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது....துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா 30.11.2017 வியாழன் மாலை தேரா தமிழ் பஜாரில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளிவாசலில் நடந்தது.

வாலிநோக்கம் கலீலுர் ரஹ்மான் பிலாலி இறைவசனங்களை ஓதினார். அதிரை ஷேக் தாவூது ஆலிம் நபி புகழ் பாடினார்.

ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகள் குறித்து தெரிவித்தார். பொதுச்செயலாளர் ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் முன்னிலை வகித்தார்.

ஈமான் அமைப்பின் சிறப்பு அழைப்பாளராக தாயகத்தில் இருந்து வருகை தந்த மிகசிறந்த சொற்பொழிவாளர் அல் ஹாபிழ் முப்தி சைபுதீன் ரஷாதி ஹஜரத் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் மீலாது விழா கொண்டாடப்படுவதின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும் நபிகளாரின் வாழ்வில் இருந்து பல்வேறு படிப்பினைகளை எடுத்துக் கூறினார்.

சீட் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, ஈமான் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் 89.4 வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகா என்ற நாகப்பனுக்கு திருக்குர் ஆனின் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாக்குழு செயலாளர் ஜமால் முஹைதீன், இஸ்லாமிய நிகழ்ச்சிகளின் செயலாளர் கோட்டார் சாதிக் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.

ஈமான் அமைப்பின் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், மூத்த ஆலோசகர் குத்தாலம் அஷ்ரப் அலி,நிர்வாக செயலாளர், காதர் முஹைதீன், அலுவலக மேலாளர் முஹம்மது யாகூப், இணை செயலாளர் சையது பாஷா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் விழா சிறப்புடன் நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-