அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம்  அயன் பேரையூரில் கிராமத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை இடுப்பளவு ஆற்று தண்ணீரில் எடுத்துக் கொண்டு சென்ற பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓகி புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூரில் இன்று பெரியசாமி (வயது68) என்பவர் உடல்நல குறைவால் இறந்தார். 

அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடுகாடு வெள்ளாற்றின் மறு கரையோரத்தில் உள்ளது.

இந்நிலையில், பெரியசாமியின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றபோது வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது. 

வேறு வழியில்லாததால் ஆற்றுத் தண்ணீரில் பெரியசாமியின் உடலை அவரது உறவினர்கள் தூக்கிக் கொண்டு ஆற்றைக்கடந்துச் சென்று பிணத்தை மயானத்தில் அடக்கம் செய்தனர்.

எனவே, இது போன்ற நிலை வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-