அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருநெல்வேலி(19 டிச 2017): அமெரிக்காவில் நடைபெறும் ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீராங்கனை ஷமிகா பர்வீன்(14) தகுதி பெற்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முஜீப் .இவருடைய மனைவி ஸலாமத். இவர்களுக்கு ஒரே மகள் ஷமிகா பர்வீன். 14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது. இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.குறிப்பாக தடகளப் போட்டிகளில் பங்குபெற்று பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில்கடந்த டிசம்பர் 1ந் தேதி முதல் 6ந் தேதி வரை ஜார்கென்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகள போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு தங்க பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளார். 

அதன் பின்பு நடைபெற்ற காது கேளாதோர் பிரிவில் தேசிய அளவில் ஜார்கென்ட் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றும் தங்க மெடல் வாங்கியும் புதிய சாதனை படைத்துள்ளார். 

இதன் மூலம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜுனியர் ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகி உள்ளார்.

ஷமிகா பர்வீனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வாழ்த்தினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-