அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.12
சவுதியில் வீட்டுப் பணியாளர்களுக்கும் சம்பள அட்டைகள் கட்டாயமாகிறது

சவுதியில் வீட்டுப் பணியாளர்கள், டிரைவர்கள் போன்ற வேலையாட்களின் மாதாந்திர சம்பளத்தை பெறுவதில் பல சங்கடங்களை சந்தித்து வந்தனர். இந்தப் பிரச்சனையை சரிசெய்யும் நோக்குடன் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வங்கி சம்பள அட்டையை போலவே வீட்டுப் பணியாளர்களும் இனி பெறுவர் என சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து முதலாளிகளும் இன்னும் 6 மாத காலத்திற்குள் தங்களின் வீட்டுப் பணியாளர்களுக்கான சம்பளக் கார்டுகளை வங்கிகளிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். புதிய பணியாளர்களுக்கு அவர்கள் சவுதிக்குள் நுழைந்த சில நாட்களிலிலேயே இந்த சம்பளக் கார்டுகளை பெற்றுத் தர வேண்டும்.

வீட்டு முதலாளிகள் சம்பளம், ஊக்கத் தொகைகள் போன்றவற்றை கார்டுகள் மூலமே செலுத்த வேண்டும். இந்தக் கார்டுகளை டெபிட் கார்டுகளை போன்றே உபயோகப்படுத்தி எந்த நேரத்திலும் வீடு சார்ந்த தொழிலாளர்கள் அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அனுமதிக்கப்பட்ட கடைகளிலிருந்து பொருட்களை வாங்கலாம் ஆனால் முதலாளிகள் மட்டுமே இதில் பணத்தை டெபாஸிட் செய்ய முடியும் அல்லது அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து மாற்ற முடியும்.

சவுதி அரேபியாவிற்குள் மட்டுமே செல்லத்தக்க இந்த சம்பளக் கார்டுகளை தங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கு பெற்றுத்தர முதலாளிக்கு சம்பந்தப்பட்ட வங்கியில் கணக்கு இருக்க வேண்டும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியும் முதலாளியும் பரஸ்பரம் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் அடையாள அட்டையை வங்கியிடம் சம்பள கணக்கு துவங்கும் போது தர வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-