அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.05
அமீரக விசா கட்டணங்கள் கம்பெனிகளின் தரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அமீரக அமைச்சரவையின் கூட்டத்தின் முடிவில் கம்பெனிகளின் தரத்திற்கு ஏற்றவாறு விசா கட்டணங்களை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. கம்பெனிகளின் தரம் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும், ஒவ்வொரு கம்பெனியிலும் பணியாற்றும் திறன்மிக்க ஊழியர்கள் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட (வெளிநாட்டினர்) ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும்.

புதிய திட்டத்தின்படி, உள்நாடு அல்லது வெளிநாட்டில் இருக்கும் ஆண் அல்லது பெண் ஊழியர்களின் வேலைத்திறன் மற்றும் கம்பெனிகளின் தரம் ஆகியவை கருத்திற் கொள்ளப்பட்டே வேலைவாய்ப்பு விசாக்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுடன் இமராத்திகள், வளைகுடா அரபு நாட்டினர் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுபவர்கள் இதிலிருந்து விலக்குப்பெறுவர்.

முதல் தரத்தினர்: 
மீன்பிடி படகுகள் வைத்திருக்கும் அமீரகத்தினர், பெரு நிறுவனங்கள், அமீரகமயப்படுத்துதலில் பங்களிப்பவர்கள், இளைஞர் நலத்திட்டங்களை கொண்டுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் 'தத்பீர்' போன்ற புதிய சேவை மையங்கள்.

இரண்டாம் தரத்தினர்:
2 ஆம் தர நிறுவனத்தினர் லெவல் ஏ,பி,சி,டி என்கிற 4 உட்பிரிவுகளுக்குள் வருவர். திறன்மிக்க ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பன்முக கலாச்சாரங்களை (Multi Cultural Workers) கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உட்பிரிவுகள் வகைப்படுத்தப்படும்.

லெவல் 2ஏ:
இந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 40 சதவிகிதம் மற்றும் அதற்கு மேற்பட்டோர் திறன்மிக்க ஊழியர்களாகவும், 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பன்முக கலாச்சாரமுடையவர்களாகவும் இருந்தால் அந்நிறுவனம் 2ஏ என வகைப்படும்.

லெவல் 2பி:
இந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவிகிதம் முதல் 40 சதவிகிதத்திற்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் திறன்மிக்க ஊழியர்களாகவும், 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பன்முக கலாச்சாரமுடையவர்களாகவும் இருந்தால் அந்நிறுவனம் 2பி என வகைப்படும்.

லெவல் 2சி:
இந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் சுமார் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதத்திற்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் திறன்மிக்க ஊழியர்களாகவும், 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பன்முக கலாச்சாரமுடையவர்களாகவும் இருந்தால் அந்நிறுவனம் 2சி என வகைப்படும்.

லெவல் 2டி:
இந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் சுமார் 5 சதவிகிதத்திற்கும் கீழ் திறன்மிக்க ஊழியர்களாகவும், 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பன்முக கலாச்சாரமுடையவர்களாகவும் இருந்தால் அந்நிறுவனம் 2பி என வகைப்படும்.

அமைச்சரவை தீர்மானப்படி:
3 ஊழியர்களுடன் மட்டும் இயங்கும் நிறுவனங்களும், 50 சதவிகித பன்முக கலாச்சார ஊழியர்களை கொண்ட 4 முதல் 10 ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனங்களும் 2பி என்ற வகைக்குள் வரும். ஒருவேளை 50 சதவிகித பன்முக கலாச்சாரம் கொண்ட ஊழியர்களை கொண்டிருக்காவிட்டால் அவை 2டி என்ற வரையறைக்குள் வரும்.

தொழிலாளர் நலச் சட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 10 வகையான குற்றங்களை ஒன்றிரண்டு விதிமீறல் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மூன்றாம் தர நிறுவனமாக கருதப்படும்.

ஒரு தரத்திலிருந்து மற்ற தரத்திற்கு அல்லது பிறிதொரு உட்பிரிவுக்கு காரண காரியங்களுடன் தேவையான காலங்களின் போது மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

அமீரகத்திற்கு வெளியேயுள்ள ஊழியர்களுக்குரிய வேலைவாய்ப்பு விசா கட்டண விபரம்:
முதல் 3 தரத்திற்குள் வரும் ஊழியர்களுக்கு 2 வருட விசாவிற்கு 200 திர்ஹம், அதேவேளை திறன்மிக்க ஊழியர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற அனுமதியுடைய நிறுவனங்களுக்கு தலா 300 திர்ஹம் கட்டணம்.

இரண்டாம் தர நிறுவனங்களுக்கான விசா கட்டணங்கள்:
1. லெவல் ஏ: திறனுடைய ஊழியர்கள் 500 திர்ஹம், பகுதி திறனுடைய ஊழியர்கள் 1,200 திர்ஹம்.
2. லெவல் பி: திறனுடைய ஊழியர்கள் 1,000 திர்ஹம், பகுதி திறனுடைய ஊழியர்கள் 2,200 திர்ஹம்.
3. லெவல் சி: திறனுடைய ஊழியர்கள் 1,500 திர்ஹம், பகுதி திறனுடைய ஊழியர்கள் 2,700 திர்ஹம்.
4. லெவல் டி: திறனுடைய ஊழியர்கள் 2,000 திர்ஹம், பகுதி திறனுடைய ஊழியர்கள் 3,200 திர்ஹம்.

மூன்றாம் தர நிறுவனங்களால் எந்தத் திறனுடைய ஊழியர்களை அமீரகத்திற்கு வெளியிலிருந்து அழைத்து வந்தாலும் தலா 5,000 திர்ஹம் செலுத்த வேண்டும்.

அதேபோல், வகைப்படுத்தப்பட்ட 2 பட்டியலின் கீழ் 2 வகையான சேவைகளுக்கு அமீரகத்திற்கு வெளியிலிருந்து கொண்டு வரப்படும் தொழிலாளர்களின் விசாவிற்கு தலா 100 திர்ஹம் செலுத்த வேண்டும்.

அமீரகத்திற்கு உள்ளேயுள்ள ஊழியர்களுக்குரிய வேலைவாய்ப்பு விசா கட்டண விபரம்:
பல வகை தரத்தின் கீழ் வரும் நிறுவனங்களும் அமீரகத்தில் பெற்றோரின் ஸ்பான்சரின் கீழுளுள்ளவர்களுக்காக தலா 200 திர்ஹம் விசா கட்டணம் செலுத்த வேண்டும்.

முதலாம் தர நிறுவனங்கள் 2 வருட விசாவிற்காக, பெற்றோரின் ஸ்பான்சர்ஷிப் கீழுள்ள ஊழியர்களுக்காக தலா 200 திர்ஹம் செலுத்த வேண்டும், திறன் எண்ணிக்கையை பற்றி பிரச்சனையில்லை.

இரண்டாம் நிலை நிறுவனங்களின் ஏ வகையினர்,
திறனுடையவர்களுக்கு 500 திர்ஹம், பகுதி திறனுடையவர்களுக்கு 1,000 திர்ஹமும், பி வகையினர் திறனுடையவர்களுக்கு 2,000 திர்ஹமும் பகுதி திறனுடையவர்களுக்கு 3,000 திர்ஹமும் கட்ட வேண்டும்.

சி வகையினர், திறனுடையவர்களுக்கு 1,500 திர்ஹம், பகுதி திறனுடையவர்களுக்கு 2,500 திர்ஹமும், டி வகையினர் திறனுடையவர்களுக்கு 2,000 திர்ஹமும் பகுதி திறனுடையவர்களுக்கு 3,000 திர்ஹமும் கட்ட வேண்டும்.

மூன்றாம் தர நிறுவனங்கள் எந்தத் ஊழியர்களை எடுத்தாலும் தலா 5,000 திர்ஹம் செலுத்த வேண்டும்.

அனைத்து பிரிவினருக்கும் விசா விண்ணப்பக் கட்டணம் 100 திர்ஹம், இளைஞர்கள் பகுதி நேர வேலை பார்க்க ஒரு வருடத்திற்குரிய விசா கட்டணம் 500 திர்ஹம்.

தரத்தின் வகைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்ட நிறுவனங்கள் தற்காலிக வேலைவாய்ப்பு விசா வேண்டினால், ஒரு மாத விசா, சில நாட்களுக்கு விசா, ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்களுக்கு விசா, பயிற்சிகால வேலைவாய்ப்பு விசா, ஒரு மாத பயிற்சிகால விசா, ஒரு ஊழியரின் வேலைத்திறனை சோதனை செய்வதற்கான விசா, ஒவ்வொரு மாதமும் ஊழியரின் வேலைத்திறனை சோதனை செய்வதற்கானது என அனைத்து வேலைவாய்ப்பு விசாக்களுக்கும் 100 திர்ஹம் கட்டணம்.

3 வகைப்பிரிவு நிறுவனங்களும் ஒரு ஊழியரை வேறொரு நிறுவனத்திற்கு அல்லது ஒரே முதலாளியின் பிறிதொரு நிறுவனத்திற்கு அல்லது பங்குதாரரின் நிறுவனத்திற்கு 2 வருடத்திற்கு மாற்றிக் கொள்ள 100 திர்ஹம் கட்டணம்.

முதல் வகைப்பிரிவு மட்டும் தங்களுடைய எந்த ஊழியர்களையும் வேறொரு முதல் வகை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள 'மாறுதல் அனுமதி கட்டணம்' 150 திர்ஹம் செலுத்த வேண்டும்.

இரண்டாம் வகைப்பிரிவு நிறுவன வகைகளின் லெவல் ஏ பிரிவு: திறன்மிக்க ஊழியர்களை மாற்றிக்கொள்ள 250 திர்ஹம், குறைந்தளவு திறனுள்ள ஊழியர்களுக்கு 500 திர்ஹம்.

லெவல் பி: திறன்மிக்க ஊழியர்களை மாற்றிக்கொள்ள 500 திர்ஹம், குறைந்தளவு திறனுள்ள ஊழியர்களுக்கு 1,000 திர்ஹம்.

லெவல் சி: திறன்மிக்க ஊழியர்களை மாற்றிக்கொள்ள 750 திர்ஹம், குறைந்தளவு திறனுள்ள ஊழியர்களுக்கு 1,250 திர்ஹம்.

லெவல் டி: திறன்மிக்க ஊழியர்களை மாற்றிக்கொள்ள 1,000 திர்ஹம், குறைந்தளவு திறனுள்ள ஊழியர்களுக்கு 1,500 திர்ஹம்.

மூன்றாம் வகை நிறுவனங்கள் அனைத்து வகை ஊழியர்களையும் மாற்றிக்கொள்ள 2,500 திர்ஹம்.

வேலைவாய்ப்பு விசாக்கள் புதுப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்தல் தொடர்பாக:

முதல் வகை நிறுவனங்கள் அனைத்து திறன் வகை ஊழியர்களின் வேலைவாய்ப்பு விசாக்களை 2 வருடங்களுக்கு புதுப்பித்துக் கொள்ள 300 திர்ஹம்.

இரண்டாம் வகை நிறுவனங்கள், லெவல் ஏ: திறனுடைய ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 500 திர்ஹம், திறன் குறைந்த ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 1,200.

லெவல் பி: திறனுடைய ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 1,000 திர்ஹம், திறன் குறைந்த ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 2,200.

லெவல் சி: திறனுடைய ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 1,500 திர்ஹம், திறன் குறைந்த ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 2,700.

லெவல் டி: திறனுடைய ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 2,000 திர்ஹம், திறன் குறைந்த ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 3,200.

மூன்றாம் வகை நிறுவனங்கள் அனைத்து வகை ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க 5,000 திர்ஹம்.

அனைத்து வகை கம்பெனிகளும் வேலை வாய்ப்பு ஓப்பந்தங்கள் மற்றும் வேலை அனுமதி விசாவில் செய்யும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் தலா 200 திர்ஹம் செலுத்த வேண்டும்.

3 பிரிவுகளின் கீழ் வரும் நிறுவனங்களும் வேலை அனுமதி விசாவை புதுப்பிப்பதற்கு மாதம் 100 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்.

3 வகைப்பாடுகளின் கீழ் வருகின்ற நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட கட்டணமாக 2,000 திர்ஹம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்னனு கையெழுத்து அட்டைக்கு கட்டணம் 250 திர்ஹம். 2 வருட பிஆர்ஓ (வெளிநாட்டினர்) அட்டைக்கு 200 திர்ஹம்.

அமீரகத்தினருக்கான 2 வருட வீட்டுப் பணியாளர் மின்னனு விசா அனுமதி பெற தலா 100 திர்ஹம் மற்றும் புதுப்பித்தல் தலா 100 திர்ஹம். இதுவே வெளிநாட்டினரின் வீட்டுப் பணியாளர் மின்னனு விசா அனுமதி ஒரு வருடத்திற்கு மட்டுமே மேற்படி கட்டணத்தில் வழங்கப்படும்.

அதேபோல் அமீரனத்தினரின் 2 வருட வீட்டுப் பணியாளர் புதிய வேலை ஒப்பந்த பத்திரங்கள் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் 50 திர்ஹம். இதுவே வெளிநாட்டினர் வீட்டு பணியாளர்களுக்கு மேற்காணும் கட்டணத்தில் 1 வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

அப்பாடா! ஏதாவது புரிந்ததா?

Source: Gulf News


நன்றி-அதிரை நியூஸ்
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-