அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை எல்.ஐ.சி. அருகே உள்ளது அரசினர் மதரஸா இ ஆஸம் மேல்நிலைப்பள்ளி. மிகவும் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் ஏழைச் சிறுவர்கள் தங்கிருந்து கல்வி பயின்று வருகின்றனர். அரசோ அந்தப் பள்ளிக்கட்டடத்தை முழுவதுமாக இடித்துவிட்டுத் தன்னுடைய பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு. அதை இடிப்பதற்காக டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதை டெண்டர் எடுத்தவர்கள், நேற்று நள்ளிரவு (08-12-2017) ஜே.சி.பி. இயந்திரத்தோடு வந்ததை அறிந்த அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அந்த வழியே சென்ற வாகனங்களும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள், 
‘‘இந்த இடம் எங்களுக்காக நவாப் காலத்தில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இடத்துக்குள் ஒரு பள்ளியும், ஒரு மசூதியும், அனாதை விடுதியும் இருக்கின்றன. இதில், அந்தப் பள்ளிக்கூடம் மட்டும் பராமரிப்பின்றி இருந்ததாகக் கூறி, அதை அரசு இடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் மறைமுகமாக அந்தப் பள்ளியை இடிக்க டெண்டரும் விடப்பட்டு இருந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து டெண்டர் எடுத்தவர்கள்கூட எங்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் நேற்று இரவு ஜே.சி.பி. இயந்திரத்தோடு அந்தப் பள்ளியை இடிக்க வந்துவிட்டனர். செய்தியறிந்து நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனால் இடிக்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று பள்ளியை இடித்துக் கையகப்படுத்த நினைத்தவர்கள், நாளை எங்கள் புனிதமான மசூதியையும் இடித்து அப்புறப்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஆகவே, இந்த விஷயத்தைப் பொறுத்தவரை இதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அரசு அதிகாரிகளோ எங்களிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தும்வரை இங்கேயே அமைதியாக இருப்போம்’’ என்றனர்.

நன்றி: விகடன்

 
 
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-