அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.12
துபையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள், மாற்றுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்வழியில் ஒன்றாக எதிர்வரும் ஜனவரி மாத துவக்கத்தில் அல் கைல் பகுதியலிருந்து பினான்ஷியல் சென்டர் பகுதியை இணைக்கும் கடல் மேல் 2 வழிப்பாதையுடன் கூடிய பாலம் திறக்கப்படவுள்ளது. இந்தப் பாலம் துபை கேனல் (Dubai Canal) எனப்படும் கடல்நீர் கால்வாயின் மீது கட்டப்பட்டுள்ளது.

சுமார் 1,270 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உள்கட்டமைப்பு பணிகளுடன் மின் விளக்குகள், தண்ணீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலம் திறக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் மணிக்கு சுமார் 4,500 வாகனங்கள் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், துபை மால் மற்றும் அதன் பிரமாண்ட விரிவாக்கப்பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்தப் பாலம் பேருதவியாக திகழும்.

Source: Gulf News


நன்றி-அதிரைநியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-