அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் அதற்கான பொருள் திரட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் களம் இறங்கியுள்ள நிலையில் ரியாத் தமிழ்ச்சொல்வேந்தர் மன்றமும் இதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
மன்றத்தின் ஆண்டுவிழா, பொங்கல் விழாவாக எதிர்வரும் ஜனவரி 19, 2018ல் நிகழ்வுறுகையில் ஹார்வர்டு நிதி குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் உண்டுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை உயர் ஆற்றல் தலைமைத்துவப் பயிற்சியில் மூத்த சொல்வேந்தர் நெளஷாத் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறார் நிகழ்ச்சிகள், இசைநிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியன நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

சொல்வேந்தர்கள் விஜயலட்சுமி மாசிலாமணி, நரேஷ்குமார், ஜாஃபர்சாதிக், பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன், சிவராமலிங்கம், இம்தியாஸ் அஹமது, அருணகிரிநாதன், தங்கசாமி, வெற்றிவேல், பேரா.மாசிலாமணி, ஜெய்ஷங்கர், ஜியாவுத்தீன் முஹம்மது, 

ராஷித் அஹமது, மகேஷ், சுவப்னா, ஷேக் முஹம்மது ஷாஜஹான், முஹம்மதுயூசுஃப், ஷஃபி, அபுல்கலாம் ஆஸாத், ஜியாவுத்தீன் முஹம்மது ஆகியோர் இந்நிகழ்வுகளை வழிநடத்திச் செல்லவிருப்பதாக சொல்வேந்தர் மன்றம் அறிவித்துள்ளது.

இதுவரை சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ரியாத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தன் செய்திக் குறிப்பொன்றில் சொல்வேந்தர் மன்றம் தெரிவித்துள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-