அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.28
அமீரகம், அஜ்மானில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்புடைய போலி தயாரிப்புக்கள் கைப்பற்றப்பட்டது

அஜ்மானின் பொருளாதார அபிவிருத்தி, கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான இயக்குனரகம் (The Directorate of Control and Consumer Protection of the Department of Economic Development — Ajman (DED-Ajman) நடத்திய 2 அதிரடி சோதனைகளின் விளைவாக சுமார் 38,571 போலி தயாரிப்புப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன, இவற்றின் மதிப்பு 8 மில்லியன் திர்ஹங்களாகும்.

உடைகள், கை பைகள் மற்றும் அதன் பாகங்கள் என சுமார் 30 புகழ்பெற்ற சர்வதேச பிராண்டுகளின் பெயரில் இப்போலி பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்தன.

இந்த அதிரடி சோதனைகளின் போது வர்த்தக மோசடி கட்டுப்பாட்டுத் துறையினர் (Commercial Fraud Department), அஜ்மான் போலீஸார், வர்த்தக முத்திரை பெற்ற சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் (Trademarks representative) உடனிருந்தனர்.

அஜ்மானில் போலி தயாரிப்புக்கள் குறித்து பொருளாதார அபிவிருத்தி, கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான இயக்குனரகத்திற்கு (DED-Ajman) தகவல் தெரிவிக்க 80070 என்றஹாட்லைன் எண்ணில் அல்லது ஈமெயில் info@ajmanded.ae வழியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-