அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
அப்பாடா என இப்போது தான் 2ஜி பிரச்சனை நம்ம நாட்ல ஒரு முடிவுக்கு வந்துள்ளது ஆனால் அமீரகம் 5ஜி நெட்வொர்கிற்கான கட்டமைப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது.

2018 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் எனும் 5ஜி அலைக்கற்றை தொழிற்நுட்ப சேவைக்கான லைசென்ஸ்களை பெற்றுள்ள நிறுவனங்கள் IMT2020 Technology எனும் 5ஜி தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் தேவையான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என அமீரக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (The Telecommunications Regulatory Authority, TRA) கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த 5ஜி தொழிற்நுட்ப அறிமுகம் அமீரகத்தின் உயர்திறன் திட்ட  வழிமுறைகளை நடைமுறைப்படுத்த உதவும் (UAE's top strategic directives). குறிப்பாக நான்காவது தொழிற்துறை புரட்சி (Fourth Industrial Revolution), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ஸ்மார்ட் நகரமயமாக்கல் (Smart City), இணைய செயற்பாடு (Internet of Things - IoT), M2M எனப்படும் பெரும் தரவுகள் பரிமாற்றம் (It will facilitate handling big data transfer between machines), அதிவேகம், வினாடிக்கு பன்மடங்கு கிகாபைட்ஸ் எனும் உயர்திறன் (capacity of multiple folds of Gigabits per second), ஸ்மார்ட் அரசாங்க செயல்பாடுகளுக்கு தேவையான மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் மாற்றங்கள் (new services that meet the requirements of the digital transformation and smart government), விரிவடைந்த ஆன்லைன் சேவைகள், அதி தீவிர பிராட் பேண்டு இயக்கத்திற்கான வழிகாட்டல்கள் (ultra-broadband throughput's on mobility) என பயன்பாடு விரியவுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-