அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.04
அமீரகத்தில் 46 வது தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதற்கும், அபுதாபி எமிரேட்டின் சார்பாகவும் போக்குவரத்து அபராதங்களில் 50% சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளாதுடன் இதை உடனே நடைமுறைப்படுத்துமாறு அமீரக உள்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார் அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ராணுவத்தின் துணை கமான்டருமான ஷேக் முஹம்மது பின் ஜாயித் அல் நஹ்யான்.

ஏற்கனவே பெரும்பாலான அமீரக எமிரேட்டுக்கள் தனித்தனியாக தள்ளுபடி மேளாக்களை நடத்திவரும் நிலையில் அமீரகம் முழுமைக்குள் செல்லுபடியாகும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவின்படி, 2016 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2017 ஆம் வருடம் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு இது பொருந்தாது.

மேலும், இந்த சிறப்புத் தள்ளுபடியின் கீழ் அபராதங்களை 2017 டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்கும் 60 நாட்கள் (2018 ஜன.30) வரையே செலுத்தலாம்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-