அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
சவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வாட் வரி திருப்பித் தரப்படும்

சவுதியில் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5% வாட் வரி அமலாகிறது. சவுதியில் பொருட்கள் வாங்கும் போது செலுத்திய வாட் வரியை வளைகுடா அரபு நாடுகளை சேராத பிற வெளிநாட்டு ஹஜ், உம்ரா மற்றும் சுற்றுலா பயணிகள் (Visitors) தங்கள் நாடுகளுக்கு திரும்பச் செல்லும் போது வாங்கிக் கொள்ளலாம் என சவுதி அரேபியாவின் ஜக்காத் மற்றும் வரிகளுக்கான பொது ஆணையம் (The General Authority of Zakat and Tax - GAZT) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினருக்கு வாட் வரியை திரும்பச் செலுத்துவதற்கான செயல்முறையை ஆராய்ந்து வருவதாகவும் இதற்காக பல இடங்களில் கவுண்டர்களை குறிப்பாக விமான நிலையங்கள் மற்றும் வளைகுடா நாடுகளுடன் அல்லாத பிற நிலவழி உள்நுழைவு மையங்களில் நிறுவப்படும் எனவும் சவுதியில் வெளிவரும் வர்த்தக தினசரியான அல் இக்திசாத் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“GAZT is studying the possibility of opening VAT reimbursement offices at many places including airports, land borders with countries other than the GCC members,”

வாட் வரியை திரும்பச் செலுத்தும் மையங்கள் அமைந்துள்ள இடங்கள் பற்றிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ஹஜ் உம்ரா பயணிகள் மற்றும் விசிட் விசாவில் வந்தவர்கள் இந்த மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி செலுத்திய வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வளைகுடா அரபு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இந்த சலுகை கிடையாது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-