அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.18
அமீரகம் துபை அல்கோஸ் இன்டஸ்ட்ரியல் ஏரியா 3 பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான ஒரு பொருள் கிடங்கில் பற்றிய தீ அருகிலுள்ள மேலும் 2 பொருள் கிடங்குகளுக்கும் பரவியதால்  நேற்று ஏற்பட்ட இத்தீவிபத்தில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கிடங்குகளில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய துணிமணிகள் போன்ற பொருட்கள் ஏராளமாக இருந்துள்ளன.

அதேபோல் அஜ்மான் இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் அமைந்துள்ள பேக்டரி மார்ட் என்ற நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 12 கடைகள் எரிந்து சம்பலாயின மேலும் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்தார், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேக்டரி மார்ட் மலிவு விலை விற்பனைக்காக அஜ்மானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-