அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச. 09
இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே 3 கன்சுலர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பிராந்திய மக்களின் வசதிக்காக மேலும் 3 அமீரக துணைத் தூதரகங்களை திறக்கவுள்ளதாக இந்தியவிற்கான அமீரக தூதர் டாக்டர் அஹமது அல் பன்னா தெரிவித்துள்ளார்.

சென்னை, ஹைதராபாத் மற்றும் சன்டீகர் ஆகிய மாநகரங்களில் இந்த புதிய துணைத் தூதரங்கள் திறக்கப்படுவதால் அப்பிராந்திய மக்கள் விசா தொடர்பான காரியங்களுக்காக தொலைதூரங்களுக்கு இனி அலைய வேண்டியதிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இமராத்திகள் இந்தியாவில் பயணம் செய்யும் போதும், இந்தியர்கள் அமீரகத்தில் இருக்கும் போதும் அனைத்து அவசரகாலங்களிலும் உதவக்கூடிய தகவல்களை கொண்ட UAE Embassy, New Delhi என்ற செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். இந்த ஆப் என்ற பெயரில் ஆப்பிள்'ஸ் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இமராத்திகளுக்கான Twajudi ஆப் என்ற பெயரில் கிடைக்கும்.

Source: Gulf News


நன்றி-அதிரை நியூஸ் 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-