அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.08
23வது ஆண்டாக நடைபெறவுள்ள உலக பிரசித்திப் பெற்ற 'துபை ஷாப்பிங் பெஸ்டிவல்' (DSF - Dubai Shopping Festival) எனப்படும் ஷாப்பிங் திருவிழா எதிர்வரும் 2017 டிசம்பர் 23 ஆம் தேதி துவங்கி 2018 ஜனவரி 27 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலிருந்தும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.

ஷாப்பிங் திருவிழா ஆரம்பமாவதையொட்டி 12 மணிநேர 'மின்னல்வேக விற்பனை' (Flash Sale) துபையின் முக்கிய மால்களான மால் ஆப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் - மிர்திப், சிட்டி சென்டர் - தேரா, சிட்டி சென்டர் - மெயாஸிம், சிட்டி சென்டர் - ஷின்டாகா மற்றும் சிட்டி சென்டர் - பர்ஸா ஆகியவற்றில் 20% முதல் 90% சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

தினமும் பல்வேறு பரிசுகளை அள்ளி வழங்கும் இந்த ஷாப்பிங் திருவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, வெள்ளிக்கிழமை தோறும் குறிப்பிட்ட சில பொருட்களின் மீது அதிக தள்ளுபடிகள் 24 மணிநேரத்திற்கு முன்பதாக அறிவிக்கப்படும். இதன் விபரங்களை துபை ஷாப்பிங் பெஸ்டிவல் இணைய தளம் மற்றும் சமூக தளங்களில் 24 மணிநேரத்திற்கு முன்பாக தெரிந்து கொள்ளலாம்.

வழமைபோல் தினமும் ஒரு இன்பினிட்டி ரக கார் ஒன்றை 200 திர்ஹம் செலுத்தி பெறப்படும் குலுக்கல் சீட்டுக்கள் மூலம் பெறலாம். 2018 ஜனவரி 25 ஆம் தேதி முதல் ஜனவரி 27 ஆம் தேதி வரை கடைசி 3 நாட்களுக்கு கடைசிகட்ட மலிவுவிலை விற்பனையில் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News


நன்றி-adrainews

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-