அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
சிட்டி ஆப் கோல்டு (City of Gold) என அழைக்கப்படுகின்ற துபையின் பாரம்பரியமிக்க தங்க நகைக்கடைகள் நிரம்பிய 'கோல்டு சூக்' (Gold Souq) எப்போதும் வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள், பெரும் சுற்றுலாவாசிகள் என நிரம்பி வழியும் ஒரு முக்கிய தலமாகும். துபை மாநகரில் பல நகைக்கடை வணிக வளாகங்கள் வந்துவிட்டாலும் இந்த பழைய கோல்டு சூக்கிற்கு இணையாக ஏதுமில்லை. எனவே, இங்கு பல மில்லியன்களை கொட்டிக் கொடுத்தாலும் கடைகள் வாடகைக்கு கிடைப்பதில்லை.

இந்த நகைக்கடைகளின் பற்றாக்குறையை போக்குவதற்காக 200க்கு மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கான நகைக்கடைகள், அலுவலகங்கள் அதன் அருகிலேயே கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கோல்டு சூக்கின் முதலாவது தொகுதி இன்னும் 18 மாதங்களில் திறக்கப்படவுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-