அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.13
100 திர்ஹம் அபராதம் குறித்து அமீரக மத்திய மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையம் விளக்கம்

அமீரக மத்திய மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையம் (Federal Electricity & Water Authority - FEWA) 100 திர்ஹம் கால தாமத அபராதம் என்ற புதிய அபராதத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் ஏற்கனவே உள்ள நடைமுறைகளே தொடர்வதாகவும் 100 திர்ஹம் தாமதத் கட்டணம் (Late Payment Fee) என்பது சேவை கட்டணம் (Service Charge) என்று பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி, பில் அனுப்பப்பட்ட 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் பின்பு 100 திர்ஹம் தாமதக் கட்டணம் சேர்த்து செலுத்திய பின்பே இணைப்பு மீண்டும் வழங்கப்படும்.

தற்போது 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தாவிட்டால் ஞாபகமூட்டல் குறுஞ்செய்தி (SMS) மொபைல் போனுக்கு அனுப்பப்படும். அப்போதும் அசட்டையாக இருந்தால் 4 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இணைப்பு துண்டிக்கப்படும். மறு இணைப்பை பெற 100 திர்ஹம் சேவை கட்டணத்தையும் சேர்த்து செலுத்தி இணைப்பை மீண்டும் பெறலாம் என FEWA விளக்கமளித்துள்ளது.

Source: Gulf News


நன்றி-அதிரைநியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-