அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நவ. 26
துபையில் இதுவரை மாநகராட்சியின் சார்பாகவே குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து வீடு, கடை மற்றும் அலுவலக வாடகை ஒப்பந்தங்களின் மீதும் 5 சதவிகித வரி மாநகராட்சிக்காக ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகிறது என்றாலும் அவை மாநகராட்சி வழங்கும் இதரவகை குடிமைப் பணிகளுக்கான வரியாக மட்டுமே கருதப்படும்.

எதிர்வரும் டிசம்பர் 1 முதல் அமலாகவுள்ள புதிய சட்டத்தின்படி, இனி துபை மாநகராட்சி குப்பையை அகற்றும் பணியை செய்யாது. குப்பையை அகற்றும் பணிகள் தனியார் துறைக்கு விடப்படும். அனைத்து வகை கட்டடங்களின் உரிமையாளர்கள் அல்லது ரியல் எஸ்டேட் நிர்வாகிகள் இந்த தனியார் குப்பை வாரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி இச்சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த புதிய சட்டத்தின்படி துபை மாநகரம் பல மண்டலங்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கு 3 தனியார் குப்பை வாரும் நிறுவனங்கள் கட்டண சேவையை வழங்கும். இந்த நிறுவனம் ஏதாவது ஒன்றுடன் பில்டிங் ஓனர் அல்லது பில்டிங்கை நிர்வகிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த கட்டணத் தொகையை வாடகைதாரர்களிடமிருந்து பில்டிங் ஓனர்கள் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வசூல் செய்து கொள்ளும். அதாவது வாடகைதாரர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

இந்த புதிய சட்டத்தின்படி, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் முழுமையாக ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின் துபை மாநகராட்சி வழங்கி வரும் இலவச குப்பை வாரும் சேவை முற்றாக நிறுத்திக் கொள்ளப்படும். மேலும் தனியார் நிறுவனங்களுக்கான குப்பை வாரும் கட்டணங்களை மண்டலங்களுக்கு ஏற்றவாறு கட்டணங்களை துபை மாநகராட்சியே நிர்ணயிக்கும்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-