அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தாரில் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்கள் மனதை நெகிழ்வு செய்யும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

கத்தாரில் Ali International Trading Company என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஓரிரு வருடத்திலேயே வேலை செய்யும் இடத்தில் வைத்து சாலையினை கடக்க முயன்ற இந்திய கேரளாவைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் முகமது அலி என்ற இரண்டு தொழிலாளர்கள் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த கம்பெனியின் உரிமையாளர் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு முடிவு எடுத்தார். இது அந்த கம்பெனியில் வேலை செய்யும் சக நண்பர்களுக்கு தங்களுடன் வேலை செய்த நண்பர்கள் இருவர் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.

அதாவது அந்த கம்பெனியின் இயக்கத்தின் கடைசி துடிப்பு நிற்கும் வரையில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மாதம் மாதம் தவறாமல் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்ததே.

மேலும் தொழிலாளர்கள் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் 50000 ஆயிரம் ரியால் காப்பீட்டு எடுத்திருந்ததும் அந்த குடும்பங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

தொழிலாளர் சுக துக்கங்களை நன்கு தெரிந்த தொழிலதிபர் முகமது ஈஸா என்ற இந்தியர் தான் இந்த கம்பெனியின் உரிமையாளர் என்பது கூடுதல் தகவல்.


VIDEO-https://www.facebook.com/PALSUWAI/videos/395376507549259/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-