அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி பதிவான மழையளவு விவரம் (மி.மீ):
பெரம்பலூர்-19, வேப்பந்தட்டை-15 மி.மீ, செட்டிகுளம் – 08, தழுதாழை-10, பாடாலூர்-05, என மொத்தம் 57 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 11.40 மி.மீ ஆகும்.

இன்று அதிகாலை முதலே ஆங்காங்கே நல்ல மழை விட்டு பெய்து வருகிறது. மேலும், இன்று காலை 9.40 மணியளவில் நல்ல பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் அரை நேரம் கனமழை பெய்தது. மேலும், அரை மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கால்நடை வளர்ப்பவர்கள் உள்ளிட்டவர்கள் மழையில் நனைந்த வண்ணம் வேலை பார்த்து வருகின்றனர். செங்கல் தொழில் முற்றிலும் மழையால் நிறுத்பப்ட்டது.

நெல் பயிர் நடவிற்காக நன்சை மற்றும் உழவாரப் பணிகள் தீவிரமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-