அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நவ. 27
துபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் மின்சக்தி கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.

துபையில் ஆன்லைன் வாடகை கார் சேவை நிறுவனமான SelfDrive.ae என்ற நிறுவனம் மின்சக்தியில் இயங்கும் கார்களை (electric car) மணிக்கணக்கில் வாடகைக்குத் தர ஏற்பாடுகளை செய்துள்ளதால் ஒரு பெருந்தொகையை செலவழித்து மின்சக்தி கார்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் அகன்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Renault Zoe All ரக வாடகை கார்கள் தினமும் 24 மணிநேரம் அல்லது தினசரி 250 கிலோ மீட்டர் என்ற பில்லிங் அடிப்படையிலும், வார, மாத பில்லிங் அடிப்படையிலும் வாடகைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார்களை துபை மின்சார வாரிய மையங்களில் (DEWA) அமைக்கப்பட்டுள்ள 90 மின் சார்ஜர்களில் இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம், இலவச பார்க்கிங் (Green Parking) மற்றும் சாலிக் டேக் (Salik Tag) போன்றவற்றிலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருப்பதற்கும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அதற்காக நன்றியையும் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் துபை மின்சாரம் (DEWA) அறிவித்திருந்தபடி, 2019 ஆம் ஆண்டு வரை கிரீன் பார்க்கிங் என்று அடையாளமிடப்பட்டுள்ள பார்க்கிங்களில் இந்த மின் சக்தி கார்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். மேலும் இலவச ரெஜிஸ்ட்ரேசன் (Free Registration), இலவச புதுப்பித்தல் (Free Renewal), இலசவ சாலிக் டேக் (Free Salik Tag) மற்றும் மின்சக்தி கார்கள் என அடையாளப்படுத்தும் இலவச நம்பர் பிளேட் ஸ்டிக்கர்கள் ஆகியவை சலுகைகளாக தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-