அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நவ.29
துபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் மற்றும் பொது போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு

துபையில் அமீரக தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதால் அரசுத்துறை நிர்வாகங்களுக்கு நவ.30 முதல் டிச.3 ஆம் தேதிவரையிலான 4 நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது அறிந்ததே. இந்த 4 நாட்களும் துபையில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்களில் மட்டும் வழமைபோல் கட்டணம் உண்டு.

4 நாட்களும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் எனப்படும் வாடிக்கையாளர் மையங்கள் திறக்கப்படாது.

துபை மெட்ரோ:
வியாழன், நவம்பர் 30: 
ரெட் லைன், அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
கிரீன் லைன், அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை


வெள்ளி, டிசம்பர் 1:
ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டும் காலை 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை

சனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:
ரெட் லைன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
கிரீன் லைன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை


துபை டிராம்:
வியாழன், நவம்பர் 30: 
அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
வெள்ளி, டிசம்பர் 1:
காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
சனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:
அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை


துபை பஸ்:
கோல்டு சூக் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.29 வரை
குபைபா (பர்துபை) பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.10 வரை
சத்வா பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 முதல் இரவு 11.35 வரை
தடம் எண் C01: 24 மணிநேரமும் சேவை வழமைபோல் நீடிக்கும்
அல் கிஸஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
அல் கோஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரை
ஜெபல் அலி பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை


மேலும் விபரங்களுக்கு: 
RTA website https://www.rta.ae/wps/portal/rta/ae/about-rta/news-and-media/all-news/NewsDetails/service+timing+during+prophet+birthday+commemoration+day+and+national+day+holiday+2017

Sources: Gulf News & The National

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-