அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நவ.26
சவுதி அரேபியாவில் தற்போது வரை கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வாழ்விட விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சவுதியில் பணியின் நிமித்தம் தங்கி இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், வியாபார நிமித்தம் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் புனித யாத்திரைக்காக மக்கா மதினாவிற்கு வருபவர்கள் என வரையறுக்கப்பட்டே வழங்கப்பட்டு வருகின்றன.

பட்டத்து இளவரசரின் பெட்ரோலியத்திற்கு பதிலான மாற்றுப் பொருளாதார திட்டங்களில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை அறிமுகப்படுத்தவும், அனுமதிக்கப்படும் சுற்றுலாத் தளங்களை அடையாளங் கண்டு இறுதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எனவே, அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா விசாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அவற்றை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள் என சவுதி சுற்றுலா மற்றும் கலாச்சார ஸ்தலங்களுக்கான தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் முதற்கட்டமாக செங்கடல் ஓரம் 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 செயற்கை தீவுகள் உருவாக்கப்படுவதுடன் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட 'மதாயின் சாலிஹ்' எனப்படும் நபி சாலிஹ் (அலை) அவர்கள் காலத்தில் அழிக்கப்பட்ட சமுதாயத்தினரின் நகரமும் திறந்துவிடப்படவுள்ளது.

Source: Khaleejtimes

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-