அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நாளை டிசம்பர் முதலாம் தேதி முதல் பெட்ரோலின்  விலையில் மீண்டும் மாற்றத்தைக் கொண்டுவர தீர்மனித்துள்ளதாக கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் ஆக்டோபர் மாதம் 1.75 ரியால்களாக விற்கப்பட்டு வந்த 95-octane சூபர் பெட்ரோல் 5 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.80 ரியால்களாகவும், 1.70 ரியால்களாக விற்கப்பட்டு வந்த 91-octane பிரிமியம் பெட்ரோல்  5 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.75 ரியால்களாகவும் விற்கப்பட இருக்கின்றன. அதேபோன்று 1.65 ரியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் 5 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.70 ரியால்களாக விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப கத்தாரின் எரிபொருள் விலையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-