அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை நீக்கம் !


சவூதி வாழ் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஸ்கைப், வாட்அப், வைபர் கோள் தடை நீக்கப்டுகின்றது!

வெளிநாடு வாழ் சகேதார்களின் சம்பளத்தை மீதப்படுத்துகின்ற வேலையை வாட்ஸ்அப், வைபர், ஸ்கைப் போன்ற குரல்வழி அழைப்பு மென்பொருட்கள் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சவூதியில் கடந்த சில வருடங்களாக வாட்ஸ்அப், ஸ்கைப், மற்றும் வைபர் போன்ற இணைய குரல் அழைப்பு செயழிகள் தடைசெய்யப்பட்டு இருந்தன.
இந்த தடை அடுத்த வாரம் முதல் நீக்கப்பட இருப்பதாக சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு செயற்றிங்களை முன்னெடுத்துச் செல்லும் தற்போதைய மன்னர் சல்மானின் அரசாங்கம், மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சவூதியின் பிரபல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்தத் தடை நீக்கப்பட இருக்கின்றன. சவூதி வாழ் வெளிநாட்டவர்களுக்கு இது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான செய்திதான் என்பதில் ஐயமில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-