அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபை போக்குவரத்துத் துறை (RTA) ஓட்டுனர்களின் வசதிக்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் இலகுரக வாகன ஓட்டுனர்கள் (Light Vehicle Drivers) தங்களின் ஆட்டோமெட்டிக் டிரைவிங் லைசென்ஸ்களை ஒரு சில எளிய சோதனைகளுக்குப் பின் மேனுவல் டிரைவிங் லைசென்ஸ்களாக மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த லைசென்ஸ் மாற்றங்களுக்காக புதிதாக பாட வகுப்புக்களுக்கு செல்ல வேண்டியதில்லை மாறாக ஓட்டுனர் சோதனைகளுக்கு நேரடியாக விண்ணப்பித்து செல்லலாம். சோதனையில் மேனுவல் கியர்களை இயக்குவதில் குறையேதும் காணப்பட்டால் அந்த குறைகள் டிரைவர்களுக்கு விளக்கப்பட்டு மறுசோதனைக்கு விண்ணப்பிக்குமுன் திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
மேனுவல் கியர் இயக்கத்தின் போது டிரைவர்கள் சாலையின் மீது செலுத்த வேண்டிய கவனம், எந்தவித கவனச் சிதறல்களும் இன்றி மேனுவல் கியர்களை மாற்றும் திறன், வாகனத்தை இயக்கும் போது எந்தத் தடங்களும் தயக்கங்களும் இன்றி எளிதாக ஒரு கியரிலிருந்து மற்ற கியருக்கு மாறுவது போன்றவை இந்த சோதனைகளின் போது மிக உன்னிப்பாக கவனிக்கப்படும்.

நன்றி: அதிரை நியூஸ்

1 கருத்துரைகள்:

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-