அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம்  V.களத்தூர் அருகே பெண்  சாவில் மர்மம் உள்ளதால் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

ஜூலை 10, 2017, 04:30 AM


பெரம்பலூர் வி.
களத்தூர்  அருகே உள்ள நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகன் ராஜா (வயது 31). இவருக்கும், புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் சுருதி (22) என்பவருக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்தது. பன்னீர்செல்வம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் திருப்பூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மயங்கி கீழே விழுந்த சுருதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுருதி பரிதாபமாக இறந்தார். பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சுருதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பெருமாள் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருதி எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருமணமான 2¾ வருடத்தில் சுருதி இறந்துள்ளதால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த நேற்று காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் வந்தார். அப்போது சுருதியின் உறவினர்கள் மற்றும் புதுநடுவலூர் கிராமமக்கள் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர். பின்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுருதி சாவில் மர்மம் உள்ளது. சுருதியை அவரது கணவர் ராஜா தாக்கியதில் தான் இறந்துள்ளார். எனவே ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சுருதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து சுருதியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரசு மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-