அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூலை 20:
தரம் உயர்த்தப்பட்ட காரை வட்டார அரசு மருத்துவ மனையை பாடாலூருக்கு இட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இது கடந்தாண்டு டிசம்பரிலிருந்து தரம் உயர்த்தப் பட்டு வட்டார அரசு மருத்துவ மனையாக இயங்கி வந்தது. ஏற் கனவே ஒரு மருத்துவரை கொண்டு இயங்கி வந்த காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்ட பிறகு 5 மருத்துவர்கள் நியமிக்கப் பட்டும்,
மீண்டும் ஒரு மருத்துவர் மட்டுமே பணிக்கு வந்து கொண்டிருந்தார். எப்படியாவது பாடாலூர் பகுதிக்கு வட்டார மருத்துவ மனை வந்து விடும், அப்போது பணிக்கு சென்று வர வசதியாக இருக்கு மென்று காரை வட்டார அரசு மருத் துவ மனைக்கு புதிதாக நியமிக் கப் பட்ட மருத்துவர்கள் செல்லாமல் இருந்து வந்தனர்.
இந் நிலையில் மருத்துவர்கள் எதிர் பார்த்தது போலவே காரையிலுள்ள வட்டார அரசு மருத்துவ மனை, தற்போது தேசிய நெடுஞ்சாலையில் ஏற் படும் விபத்துகளை காரணம் காட்டி, காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் மருத்துவ வசதி தேவைப்படுவதாகவும், அதற் காக காரையில் உள்ள வட்டார அரசு மருத்து வமனை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூருக்கு இடம் பெயர்வதாக அறி வித் துள் ளது. இந் நி லை யில் நேற்று மதியம் மாவட்ட மருத் துவ நலப் ப ணி கள் இணை இயக் கு நர் செல் வ ரா ஜன் உள் ளிட் டோர் காரைக்கு சென்று இட மாற்றத்துக் கான அறி விப்பை வெளி யிட் ட னர். இந்த தக வல் கிடைத் த தும் காரை வட் டார அரசு மருத் து வ ம னைக்கு காரை, புதுக்குறிச்சி, மலையப்ப நகர், வரகுபாடி, தெரணி உள்ளிட்ட பல் வேறு கிராம மக்கள் வந்து மருத் துவ அதி கா ரி கள் குழுவை முற் று கை யிட் ட னர்.
பாடாலூர் சப் இன்ஸ் பெக்டர் சுப்ரமணியன் உள் ளிட் டோர் காரைக்கு சென்று பொது மக் களை கட் டுப் ப டுத் தி யும் முடி ய வில்லை. பின் னர் காரை யில் ஒன்று கூடிய பொது மக் கள், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின் னர் பொது மக் க ளு டன் தமிழ் மாநில காங் கி ரஸ் கொள்கை பரப்பு செய லா ளர் சுப் ர ம ணி யன், திமுக பிர மு கர் நீல் ராஜ், அதி முக பிர மு கர் கள் காரை கலை ய ர சன், புதுக் குறிச்சி தங் க வேல், வரகு பாடி துரை, தேவேந் தி ரன் உள் ளிட்ட 60க்கும் மேற் பட் டோர் கலெக்டர் சாந்தாவிடம் மனு அளித்தனர்.
காரை யில் ஆரம்ப சுகா தார நிலை யம்
மாவட்ட மருத் துவ நலப் ப ணி கள் இணை இயக் கு நர் செல் வ ரா ஜ னி டம் கேட்ட போது, தேசிய நெடுஞ்சாலையில் ஏற் ப டும் விபத் து க ளுக்கு முத லு தவி சிகிச்சை அளிப் ப தற் காக பாடாலூரில் வட்டார அரசு மருத்துவ மனை அமைய மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்ததால் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு காரை சுற் று வட் டார மக் கள் எதிர்ப்பு தெரி வித் துள் ள னர். இருந்தும் பழைய படி காரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அதே கட்டிடத் தில் இயங்கும் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-