அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 ஜூலை 20
ஹஜ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் யாத்ரீகர்கள் கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிகள் குறித்த விபரங்களை சவுதியின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நவீன நோய்களான ஸிகா வைரஸ், டெங்கு, மத்திய கிழக்கு சுவாச நோய், மஞ்சள் காமாலை, காலரா, மூளைக்காய்ச்சல், போலியோ மற்றும் பருவகால காய்ச்சலுக்கு (Zika virus, dengue, Middle East respiratory syndrome coronavirus (MERS), yellow fever, cholera, meningitis, polio and vaccination against seasonal influenza) எதிரான தடுப்பு ஊசிகளை புதிய வழிகாட்டுதலின்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி அனைத்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு யாத்ரீகர்கள் மீதும் கட்டாயமாகும் (meningitis is mandatory for all local and foreign pilgrims).

சளிக்காய்ச்சலுக்கு எதிரான ஊசி கட்டாயமில்லை என்றாலும் யாத்ரீகர்கள் தங்கள் நாட்டின் சீதோஷ்ணநிலை மற்றும் எளிதில் மாறுபடும் உடலின் தன்மையை பொறுத்து (flu vaccine) ஊசியை போட்டுக் கொள்வது அவர்களுக்கு நல்லது.

அதீத உடல் கோளாறுகளான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் (diabetes, hypertension and renal problems) உள்ளவர்கள் காய்ச்சல் தடுப்பூசியை (flu vaccine) போட்டுக் கொள்வதன் மூலம் தங்களின் ஹஜ் உம்ரா கிரிகளை உபாதைகள் இன்றி நிறைவேற்றலாம்.

சர்வதேச சுகாதார சட்டம் 2005ன் படி, மஞ்சள் காமாலை தொற்று உள்ள நாடுகளிலிருந்து வரக்கூடிய யாத்ரீகர்கள் கட்டாயம் அதற்கான ஊசியை போட்டுக் கொண்டதற்கான ஆயுட்காலம் முழுவதும் செல்லத்தக்க சான்றிதழுடன் வர வேண்டும் மேலும் இந்த ஊசியை போட்டு கொண்ட பின் 10 தினங்களுக்கு பின் தான் இந்த சான்றிதழ் செல்லுபடியாகும்.(The life-long certificate is valid from 10 days after the vaccination date)

அதேபோல் மஞ்சல் காமாலை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்கள், கப்பல்கள் மற்றும் இதர வகை போக்குவரத்து சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சுகாதார சட்ட வழிகாட்டுதலின்படி தடுப்பு மருந்துகள் பூசப்பட்டதற்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும். (certificate indicating that they applied disinsection in accordance with methods recommended by the World Health Organization (WHO)

பாகிஸ்தான், நைஜீரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் அனைத்து வயது பயணிகளும் போலியோ தடுப்பு மருந்துகளை குறைந்தபட்சம் புறப்படுவதற்கு 4 வாரங்களுக்கு முன்னிருந்து அதிகபட்சம் 12 மாதங்களுக்குள் எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழுடன் சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். (required to apply for an entry visa to Saudi Arabia for travelers arriving from countries including Afghanistan, Nigeria and Pakistan)

போலியோ கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் மீண்டும் பாதிக்கும் சாத்தியக்கூறுள்ள நாடுகளான கேமரூன், மத்திய ஆப்பிரிக்கா ரிபப்ளிக் (Republic of Central Africa), ஜாடு (Chad), கினியா, லவோஸ், மடாகஸ்கர், மியான்மார், நைஜர், உக்ரைன், காங்கோ ஜனநாயக ரிபப்ளிக் (Democratic Republic of Congo), ஈக்குடோரியல் கினியா (Equatorial Guinea), எத்தியோப்பியா, இராக், கென்யா, லைபீரியா, சியர்ரா லீயொன், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து கட்டாயமாகும்.

இப்புதிய தடுப்பூசி விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் படி சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள சவுதி தூதரகங்களுக்கு சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-